Wednesday 21 August 2013

story of madras part - 3

வெள்ளையர்களின் திருமண பந்தங்களை பற்றி சென்றஇரண்டாம் பாகத்தில் எழுதி இருந்தேன் .. என் நண்பர் பல கேள்விகளை எழுப்பினார் .. சரி அதை பற்றி சில குறிப்புகள் தேடி பதிவு செய்யாவிட்டால் நல்ல இருக்காது என்று ..

இங்கிலாந்தில் இருந்து பெண்களை கப்பலில் அனுப்ப அரசன் அனுமதி வேண்டும் அது அப்போது கிடைக்கவில்லை ..(1650 வரை)

   1609 AD இல் முதல் முதலாக இங்கிலாந்து அரசன் ஜெமேஸ் I, கேப்டன் ஹாகின்ஸ் என்பவரை இந்தியாவிற்கு தூதுவராக அனுப்பினார்.. அப்போது டெல்லியை ஆண்டு கொண்டு இருந்த முகலாய  அரசர் ஜஹாங்கீர் . அவருக்கு ஹாகின்ஸ்ஐ மிகவும் பிடித்து விட்டது (பின்ன இருக்காதா அவர் அரசருக்கு வித விதமான போதை வஸ்துக்கள்..குடுத்து .. பெரிய லிஸ்டே இருக்கு) எனவே அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார், அவர் தூதுவராக இருப்பதால் சம்பளம் பெறவில்லை ஆனால் நிறைய அழகிகளை வழங்கினார் .. அதில் ஒரு ஆர்மேனியன் நாட்டு அழகியை தேர்ந்தெடுத்து பின்னர் தனது நாட்டிற்க்கும் அழைத்து சென்றார் !!! எனவே இங்கு வேலைக்கு வரும் ஐரோப்பியர் அனைவரும் விரும்பி ஏற்ற பரிசு பொருள் .. அழகிகளே !!

 ஐரோப்பியர்கள் எழுத்துக்களில் இந்திய ஆளும் வர்க்கம் பல மாதுக்களின் நடனத்தை  ரசிப்பதை தங்களது வாழ்க்கை முறையாக கொண்டு இருந்தததும் ஐரோப்பியர்கள் அவர்களுடன் இவற்றை ரசித்து  இருந்ததும் தெரிகிறது ..

போர்த்துகீசியர்கள் தங்கள் நாட்டில் இருந்து அனாதை பெண்களை கப்பல் ஏற்றி அனுப்பி அவர்களை திருமணம் செய்யும் அதிகரிக்களுக்கு சலுகைகள் குடுத்து வந்துள்ளனர்
,

 அந்த போர்த்துகீசியர் கப்பலை ஒரு முறை களவாடி சூரத்துக்கு (குஜராத்) எடுத்து சென்று டச்சு காரர்கள் அந்த பெண்களை அதிக விலைக்கு ஏலத்தில் விற்றனர்!! அப்போது இந்தியாவில் வியாபாரம் செய்த ஐரோப்பியருக்கு அவர்கள்  பெண்கள் இல்லாததால் மிகப் பெரிய போட்டி இருந்ததாக சொல்லுகிறார்கள் அந்த ஏலத்திருக்கு!!.

சரி பெண்கள் இல்லாமல் அவங்க ஒழுங்கா இருந்தாங்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் .. வியாபாரத்தை தவிர அவர்களின் மிகபெரிய பிரச்சனை குடி .. எல்லாரும் குடித்து விட்டு ஒரே சண்டை போட்டுக்கொண்டு .. மாட்டினால் கப்பல் ஏற்றி ஊருக்கு அனுப்பி விடுவர் !! ஒவ்வொருவரும் ஒருநாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் குடிக்கலாம் என்றும் அதை தாண்டி அவர் குடித்து இருந்தால் அவருக்கும் அதை விற்றவருக்கும் இரண்டு பகோடாஸ் அபராதம் விதிக்கப்பட்டது
 



1670
AD Sir william Langhorne என்பவர் கவர்னர் பதவிக்கு வந்தார் (இவர் பிற்காலத்தில் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களின் முதாதையர் ) ..இவர் காலத்துக்கு பிறகுதான் எல்லா விசயங்களும் பதிவு செய்யப்பட்டு நமக்கு கிடைக்கின்றனர்.

இவர் காலத்தில் சென்னபட்டணத்தின் வாடகையை
 ஹைதராபாத் , கோல்கொண்டா ராஜா விற்கு  குடுக்க ஆரம்பித்தனர். அது வரை விஜயநகர் ராஜாவிற்கு குடுத்து வந்திருந்தார்கள் 


Colbert 
1665 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசும் இந்திய வாணிபத்தில் ஈடுபட விழைந்தது .. அபோதைய பிரெஞ்சு  அரசின் ஆலோசகர் Colbert (comptroller general under French king Louis XIV), பெரு முயற்சியால் ,  அவர்தம் நண்பர் அவுரங்கசிப் அரசவையில் மருத்துவராக இருந்த இன்னொரு பிரெஞ்சு காரர் Bernier மூலமாக தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்க அனுமதி பெற்றனர்!! (இதன் கைமாறாக Bernier ஒரு டைரக்டர் (French east india company)ஆக்கப்பட்டது, இன்று நடக்கும் கதை போல் இருந்தால் அது உங்கள் கற்பனையே !!!

 1754 வரை இவர்கள் சரித்திரம் நம் கூட வரும் எனவே ..  இவர்கள் ஆரம்பத்திலே படையுடன் வந்ததால் ஒரு நூற்றாண்டு நன்றாக இந்தியாவை கொள்ளை அடிக்க முடிந்தது, எனவே இவர்களின் இந்திய நுழைவு பற்றி இந்த நூற்றாண்டிலேயே  பார்க்கிறோம்  ஆனா எல்லா அந்நியரும்  தமிழகத்தையே குறி வைத்து வந்ததால் என்னவோ , வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் நமக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்  

கத்தோலிக்க பிரான்சும்
, ப்ராடாஸ்டன்ட் இங்கிலாந்தும் மத சண்டை இட்டுக்கொண்டு இருந்த காலம் .. பிரான்ஸ் மிக வேகமாகா ஒரு வல்லரசாக ஐரோப்பியாவில் உருவேடுத்துக்கொண்டு வந்தது ..1671 இல் அவர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் ஒரு 12 கப்பல் பொருள்களுடன், படையுடன் கூட  !!!

1672
 பிரெஞ்சு கார்கள் சாந்தோம் பகுதியை தங்களது படை பலத்தால் பிடித்துக்கொண்டனர் !! இதுவே நமது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் கடல்வழி அந்நிய ஆக்கிரமிப்பு!!!

பிரெஞ்சு காரர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு மிக சிறந்த கோட்டையை கட்டினர் (அது புனித ஜார்ஜ் கோட்டையை விட வலுவாக இருந்ததாக சொல்லுகிறார்கள்) இதை கண்ட
 Sir william Langhorne லண்டனுக்கு  ஒரு கடிதம் போட்டு, இனிமேல் நாம் இங்கு இருக்க முடியாது வேறு ஏதாவது ஒரு ஊரை வாடகைக்கு பெறுவோம் .. என்று 2nd February 1674 அன்று கூடிய ஒரு கூடத்தில் முடிவெடுத்து .. இருக்கிறபோது .. டச்சு காரர்கள் (அப்போது அவர்கள் கை தான் ஓங்கி இருந்தது ) பிரெஞ்சு காரர்கள் அனைவரையும் விரட்டி பின் அந்த கோட்டை இடிக்கப்பட்டது (July 1672 – August 1674) 
இந்த இரண்டு ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளின் உறவுகள் ஒரே குழப்பமாக இருந்தன ..(அங்கே சண்டையில் இருந்த டச்சும் இங்கிலாந்தும் இந்தியாவில் புலிகாட் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நடப்பாக இருந்தார்கள் )  அதனால் பிரான்ஸ் தன்னை மிக சுலபமாக இங்கு நிலைநாட்டிக்கொண்டது !!

சரித்திரத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆங்கிலேயருக்கு காலம் சகாயமாக இருந்திருப்பது நம்ப முடியாத ஒரு விசயமே !!

ஹவாலா ...மறைமுக வர்த்தகம் :-
 

Cassa Verona, இவர் பெயரை வைத்து இவர் இந்தியரா ஐரோப்பியர என்று புரியவில்லை, இவர் செய்த வேலைகள் .. இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐரோப்பிய பாக்டரி(வியாபார தளத்தை அப்படிதான் அப்போது அழைத்தார்கள்) களுக்கும் பணம் அனுப்பும் வேலை .(சென்னையில் இருந்து சூரத்க்கு பணம் அனுப்புவது  மாறி). லோக்கல் முஸ்லிம் படை தளபதிகளுக்கு பரிசு பொருள் குடுத்து பிரச்சனை வரமால் பார்த்துக்கொள்ளுதல் .(local leison).மேலும் இவர் தனியாகவே மிகப் பெரிய ஐரோப்பிய வர்த்தகம் செய்தது வந்ததாக சொல்லப்படுகிறது .. நமது நாட்டில் என்ன பொருள் எங்கு கிடைக்கும் என்கிற எல்லா விசயங்களையும் பொருள்களையும் இவர் ஐரோப்பிய (இங்கிலீஷ் டச்சு மற்றும் போர்டுகீசியருக்கும் ) வர்த்தகர்களுக்கு வழங்கி வந்து இருக்கிறார்..

அந்த காலக்கட்டத்தில் (இப்போ மட்டும் என்ன
?) இந்தியாவில்
 விளங்கிய மிக மிக அதிகமான லஞ்ச லாவண்யம் லண்டனில் இருக்கும் டைரக்டர் களுக்கு பெரிய சவாலாகவே இருந்தது ..சென்னையில் வேலைக்கு வரும் அனைவரயும் இவர்(Cassa Verona) தனி வியாபாரம் (private trade not in the account of east india company) செய்ய தூண்டி அந்த பணத்தை கம்பெனி கப்பல் மூலமாக இல்லாமல் தானே ஐரோப்பியாவில் குடுக்க செய்யும் அளவிற்கு (சுமார் 500 ஆண்டுக்கு முன்!!!) திறமை சாலியாக இருந்திருக்கிறார்!!
நாம் முன்பே கண்ட சாந்தோம் பகுதி பிரெஞ்சு காரர்கள் விரட்டப்பட்ட பிறகு முஸ்லிம் நவாப்இடம் இருந்து தாங்களே  (வெள்ளையர்கள்) வாங்கினால் அதிகம் வாடகை குடுக்க வேண்டும் என்பதற்காக இவர் பெயரில் வாடகைக்கு எடுத்து ஆங்கிலேயர்கள் அதில் வரும் லாபத்தை பங்கிட்டு கொண்டார்கள் !! 

அப்போது சென்னபட்டணத்தின் வாடகை வருசத்துக்கு
 1200 பகோடாஸ் !!(இதை 2000 ஆகா ஆக்காமல் இருக்க குடுத்த லஞ்சம் பற்றிய குறிப்பு கூட இருக்கிறது , ஒரு பட்டு துணி , குதிரை , 60 பக்கோடாஸ் பெறுமானம் உள்ள தங்க சங்கிலி )

இதே காலகட்டத்தில் லிங்கப்பா என்கிற ஒரு பூந்தமல்லி
  நாயகன் பற்றிய ஒரு குறிப்பு தொடர்ச்சியாக வருகிறது ... இவன் ஆங்கிலேயருக்கு குடுத்த தொந்தரவுகள் பற்றி பின்பு பார்ப்போம் !!!

1 comment:

  1. This is More sumptupus than what we were taught at school about history,and facts are interesting and unadulterated. Awaiting the next part. Sorry about not commenting on the earlier parts.

    ReplyDelete