Sunday 18 August 2013

story of madras part - 2

சென்னையின் கதை பாகம் - 2.. (சென்னை கோட்டையில் முதல் சூது கவ்வும் !!)

         போர்த்துகீசியர்கள்  தனது வியாபாரத்தை பெருமளவு பெருக்கியதன் காரணம் அவர்கள் புலிகட் பகுதியில் அவர்கள் வைத்திருக்கும் கோட்டையே என்பதை விளக்கி , நாமும் வாங்கிய இடத்தில் ஒரு கோட்டை அமைக்க லண்டன் மாநகரில் உள்ள அவர்கள் டைரக்டர்களுக்கு 5th November, 1642 தேதி இட்ட கடிதத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள்  தேவைகளை பட்டியல் இட்டுள்ளனர் ..

          தங்களுக்கு ஒரு £2,300/- தேவைப்படும் என்றும் அதை கொண்டு ஒரு நூறு பெயர் கொண்ட சிறிய படைத்தளமாக அதை அமைக்கலாம் என்று கடிதம் எழுதினர் .ஆனால் லண்டனில் உள்ளவர்களோ அந்த அளவு செலவு செய்ய விரும்பவில்லை .. 

       1653 இல் சென்னை கோட்டை 26 சிப்பாய்கள் கொண்ட ஒரு சாதாரண ஆபீஸ் போன்றே செயல் பட்டது .

        (1670 AD இக்கு பிறகே ஒரு முறையான விசயங்கள் நமக்கு காணக்கிடைக்கின்றன , "Bruce's annals" என்கிற குறிப்புகளில் மட்டுமே இந்த கால கட்ட விசயங்கள் நமக்கு கிடைகின்றன !!)

   1654 ஆம் ஆண்டு நமது சென்னையை பிரெசிடென்சி (presidency) என அறிவித்து வெறும் 10 சிப்பாய்களை நேமித்தார்கள்!! 

February 1661, முதல் தலைவர் சென்னை கோட்டைக்கு தேர்வானார் ..

அவர் பெயர் Sir Edward winter, (நாம் இவரை விண்டர் என்றே அழைப்போம்) 

     இவர் பதவி ஏற்ற காலம், இந்தியாவில் வியாபாரம் அதிகம் இல்லை .. மேலும் இங்கிலாந்தில் உள் நாட்டு போர் நடந்து கொண்டு இருந்த நேரம் ..(King charles and his parliament had in logger head)  அரசன் சார்ல்ஸ் ஸ்காட்லான்ட் கூட சண்டை இட்டு பணம் இல்லாததால் வர்த்தக நிருவனங்களை பிழிந்து £63,000/- வரை பிடுங்கி கொண்டான் ..

     பணம் அனுப்ப வேண்டிய லண்டன் தலைமையகம் இப்படி தவித்துக்கொண்டு இருந்த போது .. சென்னையை சுற்றி போர் மேகம் .. பீஜப்பூர் சூல்தான், தமிழகத்தை ஆண்ட விஜயநகர் ராஜாவை விரட்ட பல முறை போரிட்டு தமிழகத்தை ரத்தக்காடாக ஆக்கி வைத்திருந்தனர் ..

    வியாபாரம் குறைய குறைய புளிகாட்டில் இருந்த போர்த்துகீசியர்கள்  ஆங்கிலேய வர்த்தகர்களை பல வழிகளில் சூறையாட தொடங்கினர் ..
மேலும் 1650 AD இல் அவர்கள் ஹிந்துக்கள் வழி பாட்டு விசயத்தில் தலைஇட்டு மிகப்பெரிய கலவரத்தை சந்தித்தார்கள் .. (இதில் ஆங்கிலேய ப்ராடஸ்டண்டுகள் இதில் தலை இடவில்லை ) ஆங்கிலே அதிகாரிகள் இதை பற்றிய அறிக்கையில் (லண்டனுக்கு அனுப்பிய) “லோக்கல் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கையுடன் வேறுபட்டே வாழ்கிறார்கள் ..நாம் அதை எதிர்த்தால் விளைவு ரத்த களமாக மாறும்” என்று தகவல் அனுப்பினர்!!
     இதே வேளையில் தலைவர் பதவி ஏற்ற விண்டர் .. இந்தியாவில் கம்பெனி பதவியில் இருந்து கொண்டு தனியாக வியாபாரம் செய்பவர்களை கைது செய்து லண்டனுக்கு அனுப்ப அரசனின்  அனுமதி பெற்றார்!! விண்டர் தான் முதல் முதலில் ஆயுதமும் வியாபாரமும் நம் இரு கண்கள் என்ற விசயத்தை புகுத்தியவர், இவர் ஒரு street smart businessman , எனது வியாபாரத்தை தடுப்பவனை கத்தி முனையில் சந்திப்பேன் என்று சொன்னவர்!!

     இதை அறிந்த அனைவரும்(அரசியல்தான்,.. திருட விடவில்லை என்றல் பெட்டிசன் என்கிற விசயம் பல ஆயிரம் வருசமா இருக்கு) ஒன்றாய் சேர்ந்து வின்டரை மாற்ற ஏற்ப்பாடு செய்து புதிய ஒரு தலைவரை கொண்டு வர செய்தனர்.  

லண்டன் இல் இருந்து ஒரு மென்மையான ஒரு படித்த, வியாபாரம் அறிந்த 
Foxcroft, என்கிற நபரை அனுப்பினார்கள் ..


நமது முதல் ப்ரெசிடென்ட் வின்டர் இவர் கீழ் மூன்று மாதம் வேலை செய்ய வேண்டியது பின் இங்கிலாந்து செல்ல வேண்டியது என்கிற ஒரு பேச்சு!!

நடந்ததே வேறு .. விண்டர் ஒரு பத்து பேரை சேர்த்துக்கொண்டு புதிதாக வந்த , பாக்ஸ் ஐ சிறை பிடித்து விட்டு இங்கிலாந்து அரசருக்கு ஒரு கடிதம் எழுதி .. நான் உங்க அடிமை .. அப்படி இப்படி நு .. தனியாக வியாபாரம் செய்தது வந்தார் ..1666 –68  வரை ...

சிறையில் வாடிய பாக்ஸ் .. பல பேர் மூலமாக கடிதம் எழுதி விண்டர் நமது கோட்டையை டச்சு காரங்களுக்கு வித்து புட்டு தப்பிக்க போறார் என்று கடிதம் போட.. லண்டனில் உள்ளவர்கள் விழித்துக்கொண்டு .. மிகப்பெரிய போர் வேலைகளை ஆரம்பித்தார்கள் .. ஐந்து கப்பல்கள், மற்றும் லோக்கல் நவாபுக்கு ஒரு கடிதம் மசூலிப்பட்னம் அதிகாரி மூலமாக .. இப்போ உள்ளே இருக்கும் அதிகாரி எங்க கிட்ட வேலையில் இல்லை எனவே அதை அவரு டச்சு காரர்கிட்ட குடுக்க அனுமதிக்க கூடாது .. (இப்போ பத்திரிக்கையில் பார்க்கிறோமே அது மாறி)

இதில் பல வழிகள் யேசிக்கப்பட்டன.. நவாபுக்கு ஐந்து ஆயிரம் பகோடாஸ் லஞ்சம் குடுத்து டச்சு ஊரா இருந்த  செயின்ட் தமொஸ் மவுண்டை எழுதி வாங்கிஅங்கிருந்து வியாபாரம் செய்வது .. இல்லை கடைசியா சண்டைதான் என்று முடிவானது ..
21st May 1668 ரெண்டு கப்பல்கள் சென்னையை அடைந்தன .. ஒரு மாத பேச்சு வார்த்தைலுக்கு பிறகு 22 August 1668 பாக்ஸ்கிராப்ட் விடுதலை செய்யப்பட்டார் .. நமது சென்னை கோட்டையில் நடந்த முதல் அரசியல் சூது ரத்தமின்றி சரி செய்யப்பட்டது ... 1670 ரெண்டு பேரும் இங்கிலாந்துக்கு திருப்பினர். (எந்த வித தண்டனையும் இல்லாமல் !! என்ன இப்ப இருக்கிற அரசியல் மாறி இருக்கா? திருடியவனுக்கு தண்டனை இல்லாமல்!!)

1670  புது ப்ரெசிடென்ட் .. Sir william Langhorne,சம்பளம் 300 பவுண்டு வருடத்திற்கு, இவரின் தலைமை பதவியின் பொது தான் முதல் வெள்ளைக்கார துரைசானி அம்மாக்கள் நமது சென்னை மண்ணில் கால் வைக்க அனுமதிகப்பட்டர்கள் ..டச்சு மற்றும் போர்துகீசியரகம் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை பெண்களை கப்பலில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பும் பழக்கம் 1580 இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன .. (இதை போன்று அனுமத்திக்க காரணம் ..பராடஸ்டன்ட் ஆங்கிலேயர்கள் கத்தோலிக்க போர்த்துகீசிய பெண்களை மணக்க விரும்பாமையே )
   சரி எவ்வளவு பேர் கோட்டையில் இருந்தார்கள் ? கல்யாணம் ஆகி இருந்ததா? ஒரு சிறு குறிப்பு :-

1678 ஜனவரியில் 24 பேர் இருந்தார்கள் கோட்டையில்

அதில் ஆறு பேர் மட்டும் திருமணம் ஆனவர்கள் (மனைவியுடன் இருந்தவர்கள் ஐவர் மட்டுமே )
ஐந்து கல்யாணம் ஆகாத பெண்கள் கோட்டையில் இருந்தனர், அதில் இருவர் விதவைகள், இருவர் இங்கிலாந்து இருந்து திருமணத்திற்காக அனுப்பப்பட்டவர்கள்)
இதை தவிர கோட்டைக்கு வெளியே வைட்டவுன்
(white town) பகுதியில் பதினாறு ஆங்கிலேயர்கள் வாழ்ந்து வந்தனர் ..(இவர்கள் பல் வேறு பெண்களை திருமணம் செய்துகொண்டு இருந்ததாக சொல்கிறது )

மொத்தமாக நாற்பது ஆண்களும் பத்து பெண்களும் ஆங்கிலேயர்கள் இருந்தனர் முழுமையான சென்னை பட்டணத்தில் ..
 இந்த கணக்கில் ஐரோப்பிய சிப்பாய்கள் கணக்கில் இல்லை ..

1670 முதல் பல்வேறு லோக்கல் மக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன அவைகளை அடுத்த பதிப்பில் பார்ப்போம் ..

















No comments:

Post a Comment