Wednesday, 21 August 2013

story of madras part - 3

வெள்ளையர்களின் திருமண பந்தங்களை பற்றி சென்றஇரண்டாம் பாகத்தில் எழுதி இருந்தேன் .. என் நண்பர் பல கேள்விகளை எழுப்பினார் .. சரி அதை பற்றி சில குறிப்புகள் தேடி பதிவு செய்யாவிட்டால் நல்ல இருக்காது என்று ..

இங்கிலாந்தில் இருந்து பெண்களை கப்பலில் அனுப்ப அரசன் அனுமதி வேண்டும் அது அப்போது கிடைக்கவில்லை ..(1650 வரை)

   1609 AD இல் முதல் முதலாக இங்கிலாந்து அரசன் ஜெமேஸ் I, கேப்டன் ஹாகின்ஸ் என்பவரை இந்தியாவிற்கு தூதுவராக அனுப்பினார்.. அப்போது டெல்லியை ஆண்டு கொண்டு இருந்த முகலாய  அரசர் ஜஹாங்கீர் . அவருக்கு ஹாகின்ஸ்ஐ மிகவும் பிடித்து விட்டது (பின்ன இருக்காதா அவர் அரசருக்கு வித விதமான போதை வஸ்துக்கள்..குடுத்து .. பெரிய லிஸ்டே இருக்கு) எனவே அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார், அவர் தூதுவராக இருப்பதால் சம்பளம் பெறவில்லை ஆனால் நிறைய அழகிகளை வழங்கினார் .. அதில் ஒரு ஆர்மேனியன் நாட்டு அழகியை தேர்ந்தெடுத்து பின்னர் தனது நாட்டிற்க்கும் அழைத்து சென்றார் !!! எனவே இங்கு வேலைக்கு வரும் ஐரோப்பியர் அனைவரும் விரும்பி ஏற்ற பரிசு பொருள் .. அழகிகளே !!

 ஐரோப்பியர்கள் எழுத்துக்களில் இந்திய ஆளும் வர்க்கம் பல மாதுக்களின் நடனத்தை  ரசிப்பதை தங்களது வாழ்க்கை முறையாக கொண்டு இருந்தததும் ஐரோப்பியர்கள் அவர்களுடன் இவற்றை ரசித்து  இருந்ததும் தெரிகிறது ..

போர்த்துகீசியர்கள் தங்கள் நாட்டில் இருந்து அனாதை பெண்களை கப்பல் ஏற்றி அனுப்பி அவர்களை திருமணம் செய்யும் அதிகரிக்களுக்கு சலுகைகள் குடுத்து வந்துள்ளனர்
,

 அந்த போர்த்துகீசியர் கப்பலை ஒரு முறை களவாடி சூரத்துக்கு (குஜராத்) எடுத்து சென்று டச்சு காரர்கள் அந்த பெண்களை அதிக விலைக்கு ஏலத்தில் விற்றனர்!! அப்போது இந்தியாவில் வியாபாரம் செய்த ஐரோப்பியருக்கு அவர்கள்  பெண்கள் இல்லாததால் மிகப் பெரிய போட்டி இருந்ததாக சொல்லுகிறார்கள் அந்த ஏலத்திருக்கு!!.

சரி பெண்கள் இல்லாமல் அவங்க ஒழுங்கா இருந்தாங்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் .. வியாபாரத்தை தவிர அவர்களின் மிகபெரிய பிரச்சனை குடி .. எல்லாரும் குடித்து விட்டு ஒரே சண்டை போட்டுக்கொண்டு .. மாட்டினால் கப்பல் ஏற்றி ஊருக்கு அனுப்பி விடுவர் !! ஒவ்வொருவரும் ஒருநாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் குடிக்கலாம் என்றும் அதை தாண்டி அவர் குடித்து இருந்தால் அவருக்கும் அதை விற்றவருக்கும் இரண்டு பகோடாஸ் அபராதம் விதிக்கப்பட்டது
 



1670
AD Sir william Langhorne என்பவர் கவர்னர் பதவிக்கு வந்தார் (இவர் பிற்காலத்தில் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களின் முதாதையர் ) ..இவர் காலத்துக்கு பிறகுதான் எல்லா விசயங்களும் பதிவு செய்யப்பட்டு நமக்கு கிடைக்கின்றனர்.

இவர் காலத்தில் சென்னபட்டணத்தின் வாடகையை
 ஹைதராபாத் , கோல்கொண்டா ராஜா விற்கு  குடுக்க ஆரம்பித்தனர். அது வரை விஜயநகர் ராஜாவிற்கு குடுத்து வந்திருந்தார்கள் 


Colbert 
1665 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசும் இந்திய வாணிபத்தில் ஈடுபட விழைந்தது .. அபோதைய பிரெஞ்சு  அரசின் ஆலோசகர் Colbert (comptroller general under French king Louis XIV), பெரு முயற்சியால் ,  அவர்தம் நண்பர் அவுரங்கசிப் அரசவையில் மருத்துவராக இருந்த இன்னொரு பிரெஞ்சு காரர் Bernier மூலமாக தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்க அனுமதி பெற்றனர்!! (இதன் கைமாறாக Bernier ஒரு டைரக்டர் (French east india company)ஆக்கப்பட்டது, இன்று நடக்கும் கதை போல் இருந்தால் அது உங்கள் கற்பனையே !!!

 1754 வரை இவர்கள் சரித்திரம் நம் கூட வரும் எனவே ..  இவர்கள் ஆரம்பத்திலே படையுடன் வந்ததால் ஒரு நூற்றாண்டு நன்றாக இந்தியாவை கொள்ளை அடிக்க முடிந்தது, எனவே இவர்களின் இந்திய நுழைவு பற்றி இந்த நூற்றாண்டிலேயே  பார்க்கிறோம்  ஆனா எல்லா அந்நியரும்  தமிழகத்தையே குறி வைத்து வந்ததால் என்னவோ , வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெயர் நமக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்  

கத்தோலிக்க பிரான்சும்
, ப்ராடாஸ்டன்ட் இங்கிலாந்தும் மத சண்டை இட்டுக்கொண்டு இருந்த காலம் .. பிரான்ஸ் மிக வேகமாகா ஒரு வல்லரசாக ஐரோப்பியாவில் உருவேடுத்துக்கொண்டு வந்தது ..1671 இல் அவர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் ஒரு 12 கப்பல் பொருள்களுடன், படையுடன் கூட  !!!

1672
 பிரெஞ்சு கார்கள் சாந்தோம் பகுதியை தங்களது படை பலத்தால் பிடித்துக்கொண்டனர் !! இதுவே நமது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் கடல்வழி அந்நிய ஆக்கிரமிப்பு!!!

பிரெஞ்சு காரர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு மிக சிறந்த கோட்டையை கட்டினர் (அது புனித ஜார்ஜ் கோட்டையை விட வலுவாக இருந்ததாக சொல்லுகிறார்கள்) இதை கண்ட
 Sir william Langhorne லண்டனுக்கு  ஒரு கடிதம் போட்டு, இனிமேல் நாம் இங்கு இருக்க முடியாது வேறு ஏதாவது ஒரு ஊரை வாடகைக்கு பெறுவோம் .. என்று 2nd February 1674 அன்று கூடிய ஒரு கூடத்தில் முடிவெடுத்து .. இருக்கிறபோது .. டச்சு காரர்கள் (அப்போது அவர்கள் கை தான் ஓங்கி இருந்தது ) பிரெஞ்சு காரர்கள் அனைவரையும் விரட்டி பின் அந்த கோட்டை இடிக்கப்பட்டது (July 1672 – August 1674) 
இந்த இரண்டு ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளின் உறவுகள் ஒரே குழப்பமாக இருந்தன ..(அங்கே சண்டையில் இருந்த டச்சும் இங்கிலாந்தும் இந்தியாவில் புலிகாட் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நடப்பாக இருந்தார்கள் )  அதனால் பிரான்ஸ் தன்னை மிக சுலபமாக இங்கு நிலைநாட்டிக்கொண்டது !!

சரித்திரத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆங்கிலேயருக்கு காலம் சகாயமாக இருந்திருப்பது நம்ப முடியாத ஒரு விசயமே !!

ஹவாலா ...மறைமுக வர்த்தகம் :-
 

Cassa Verona, இவர் பெயரை வைத்து இவர் இந்தியரா ஐரோப்பியர என்று புரியவில்லை, இவர் செய்த வேலைகள் .. இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐரோப்பிய பாக்டரி(வியாபார தளத்தை அப்படிதான் அப்போது அழைத்தார்கள்) களுக்கும் பணம் அனுப்பும் வேலை .(சென்னையில் இருந்து சூரத்க்கு பணம் அனுப்புவது  மாறி). லோக்கல் முஸ்லிம் படை தளபதிகளுக்கு பரிசு பொருள் குடுத்து பிரச்சனை வரமால் பார்த்துக்கொள்ளுதல் .(local leison).மேலும் இவர் தனியாகவே மிகப் பெரிய ஐரோப்பிய வர்த்தகம் செய்தது வந்ததாக சொல்லப்படுகிறது .. நமது நாட்டில் என்ன பொருள் எங்கு கிடைக்கும் என்கிற எல்லா விசயங்களையும் பொருள்களையும் இவர் ஐரோப்பிய (இங்கிலீஷ் டச்சு மற்றும் போர்டுகீசியருக்கும் ) வர்த்தகர்களுக்கு வழங்கி வந்து இருக்கிறார்..

அந்த காலக்கட்டத்தில் (இப்போ மட்டும் என்ன
?) இந்தியாவில்
 விளங்கிய மிக மிக அதிகமான லஞ்ச லாவண்யம் லண்டனில் இருக்கும் டைரக்டர் களுக்கு பெரிய சவாலாகவே இருந்தது ..சென்னையில் வேலைக்கு வரும் அனைவரயும் இவர்(Cassa Verona) தனி வியாபாரம் (private trade not in the account of east india company) செய்ய தூண்டி அந்த பணத்தை கம்பெனி கப்பல் மூலமாக இல்லாமல் தானே ஐரோப்பியாவில் குடுக்க செய்யும் அளவிற்கு (சுமார் 500 ஆண்டுக்கு முன்!!!) திறமை சாலியாக இருந்திருக்கிறார்!!
நாம் முன்பே கண்ட சாந்தோம் பகுதி பிரெஞ்சு காரர்கள் விரட்டப்பட்ட பிறகு முஸ்லிம் நவாப்இடம் இருந்து தாங்களே  (வெள்ளையர்கள்) வாங்கினால் அதிகம் வாடகை குடுக்க வேண்டும் என்பதற்காக இவர் பெயரில் வாடகைக்கு எடுத்து ஆங்கிலேயர்கள் அதில் வரும் லாபத்தை பங்கிட்டு கொண்டார்கள் !! 

அப்போது சென்னபட்டணத்தின் வாடகை வருசத்துக்கு
 1200 பகோடாஸ் !!(இதை 2000 ஆகா ஆக்காமல் இருக்க குடுத்த லஞ்சம் பற்றிய குறிப்பு கூட இருக்கிறது , ஒரு பட்டு துணி , குதிரை , 60 பக்கோடாஸ் பெறுமானம் உள்ள தங்க சங்கிலி )

இதே காலகட்டத்தில் லிங்கப்பா என்கிற ஒரு பூந்தமல்லி
  நாயகன் பற்றிய ஒரு குறிப்பு தொடர்ச்சியாக வருகிறது ... இவன் ஆங்கிலேயருக்கு குடுத்த தொந்தரவுகள் பற்றி பின்பு பார்ப்போம் !!!

Sunday, 18 August 2013

story of madras part - 2

சென்னையின் கதை பாகம் - 2.. (சென்னை கோட்டையில் முதல் சூது கவ்வும் !!)

         போர்த்துகீசியர்கள்  தனது வியாபாரத்தை பெருமளவு பெருக்கியதன் காரணம் அவர்கள் புலிகட் பகுதியில் அவர்கள் வைத்திருக்கும் கோட்டையே என்பதை விளக்கி , நாமும் வாங்கிய இடத்தில் ஒரு கோட்டை அமைக்க லண்டன் மாநகரில் உள்ள அவர்கள் டைரக்டர்களுக்கு 5th November, 1642 தேதி இட்ட கடிதத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள்  தேவைகளை பட்டியல் இட்டுள்ளனர் ..

          தங்களுக்கு ஒரு £2,300/- தேவைப்படும் என்றும் அதை கொண்டு ஒரு நூறு பெயர் கொண்ட சிறிய படைத்தளமாக அதை அமைக்கலாம் என்று கடிதம் எழுதினர் .ஆனால் லண்டனில் உள்ளவர்களோ அந்த அளவு செலவு செய்ய விரும்பவில்லை .. 

       1653 இல் சென்னை கோட்டை 26 சிப்பாய்கள் கொண்ட ஒரு சாதாரண ஆபீஸ் போன்றே செயல் பட்டது .

        (1670 AD இக்கு பிறகே ஒரு முறையான விசயங்கள் நமக்கு காணக்கிடைக்கின்றன , "Bruce's annals" என்கிற குறிப்புகளில் மட்டுமே இந்த கால கட்ட விசயங்கள் நமக்கு கிடைகின்றன !!)

   1654 ஆம் ஆண்டு நமது சென்னையை பிரெசிடென்சி (presidency) என அறிவித்து வெறும் 10 சிப்பாய்களை நேமித்தார்கள்!! 

February 1661, முதல் தலைவர் சென்னை கோட்டைக்கு தேர்வானார் ..

அவர் பெயர் Sir Edward winter, (நாம் இவரை விண்டர் என்றே அழைப்போம்) 

     இவர் பதவி ஏற்ற காலம், இந்தியாவில் வியாபாரம் அதிகம் இல்லை .. மேலும் இங்கிலாந்தில் உள் நாட்டு போர் நடந்து கொண்டு இருந்த நேரம் ..(King charles and his parliament had in logger head)  அரசன் சார்ல்ஸ் ஸ்காட்லான்ட் கூட சண்டை இட்டு பணம் இல்லாததால் வர்த்தக நிருவனங்களை பிழிந்து £63,000/- வரை பிடுங்கி கொண்டான் ..

     பணம் அனுப்ப வேண்டிய லண்டன் தலைமையகம் இப்படி தவித்துக்கொண்டு இருந்த போது .. சென்னையை சுற்றி போர் மேகம் .. பீஜப்பூர் சூல்தான், தமிழகத்தை ஆண்ட விஜயநகர் ராஜாவை விரட்ட பல முறை போரிட்டு தமிழகத்தை ரத்தக்காடாக ஆக்கி வைத்திருந்தனர் ..

    வியாபாரம் குறைய குறைய புளிகாட்டில் இருந்த போர்த்துகீசியர்கள்  ஆங்கிலேய வர்த்தகர்களை பல வழிகளில் சூறையாட தொடங்கினர் ..
மேலும் 1650 AD இல் அவர்கள் ஹிந்துக்கள் வழி பாட்டு விசயத்தில் தலைஇட்டு மிகப்பெரிய கலவரத்தை சந்தித்தார்கள் .. (இதில் ஆங்கிலேய ப்ராடஸ்டண்டுகள் இதில் தலை இடவில்லை ) ஆங்கிலே அதிகாரிகள் இதை பற்றிய அறிக்கையில் (லண்டனுக்கு அனுப்பிய) “லோக்கல் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கையுடன் வேறுபட்டே வாழ்கிறார்கள் ..நாம் அதை எதிர்த்தால் விளைவு ரத்த களமாக மாறும்” என்று தகவல் அனுப்பினர்!!
     இதே வேளையில் தலைவர் பதவி ஏற்ற விண்டர் .. இந்தியாவில் கம்பெனி பதவியில் இருந்து கொண்டு தனியாக வியாபாரம் செய்பவர்களை கைது செய்து லண்டனுக்கு அனுப்ப அரசனின்  அனுமதி பெற்றார்!! விண்டர் தான் முதல் முதலில் ஆயுதமும் வியாபாரமும் நம் இரு கண்கள் என்ற விசயத்தை புகுத்தியவர், இவர் ஒரு street smart businessman , எனது வியாபாரத்தை தடுப்பவனை கத்தி முனையில் சந்திப்பேன் என்று சொன்னவர்!!

     இதை அறிந்த அனைவரும்(அரசியல்தான்,.. திருட விடவில்லை என்றல் பெட்டிசன் என்கிற விசயம் பல ஆயிரம் வருசமா இருக்கு) ஒன்றாய் சேர்ந்து வின்டரை மாற்ற ஏற்ப்பாடு செய்து புதிய ஒரு தலைவரை கொண்டு வர செய்தனர்.  

லண்டன் இல் இருந்து ஒரு மென்மையான ஒரு படித்த, வியாபாரம் அறிந்த 
Foxcroft, என்கிற நபரை அனுப்பினார்கள் ..


நமது முதல் ப்ரெசிடென்ட் வின்டர் இவர் கீழ் மூன்று மாதம் வேலை செய்ய வேண்டியது பின் இங்கிலாந்து செல்ல வேண்டியது என்கிற ஒரு பேச்சு!!

நடந்ததே வேறு .. விண்டர் ஒரு பத்து பேரை சேர்த்துக்கொண்டு புதிதாக வந்த , பாக்ஸ் ஐ சிறை பிடித்து விட்டு இங்கிலாந்து அரசருக்கு ஒரு கடிதம் எழுதி .. நான் உங்க அடிமை .. அப்படி இப்படி நு .. தனியாக வியாபாரம் செய்தது வந்தார் ..1666 –68  வரை ...

சிறையில் வாடிய பாக்ஸ் .. பல பேர் மூலமாக கடிதம் எழுதி விண்டர் நமது கோட்டையை டச்சு காரங்களுக்கு வித்து புட்டு தப்பிக்க போறார் என்று கடிதம் போட.. லண்டனில் உள்ளவர்கள் விழித்துக்கொண்டு .. மிகப்பெரிய போர் வேலைகளை ஆரம்பித்தார்கள் .. ஐந்து கப்பல்கள், மற்றும் லோக்கல் நவாபுக்கு ஒரு கடிதம் மசூலிப்பட்னம் அதிகாரி மூலமாக .. இப்போ உள்ளே இருக்கும் அதிகாரி எங்க கிட்ட வேலையில் இல்லை எனவே அதை அவரு டச்சு காரர்கிட்ட குடுக்க அனுமதிக்க கூடாது .. (இப்போ பத்திரிக்கையில் பார்க்கிறோமே அது மாறி)

இதில் பல வழிகள் யேசிக்கப்பட்டன.. நவாபுக்கு ஐந்து ஆயிரம் பகோடாஸ் லஞ்சம் குடுத்து டச்சு ஊரா இருந்த  செயின்ட் தமொஸ் மவுண்டை எழுதி வாங்கிஅங்கிருந்து வியாபாரம் செய்வது .. இல்லை கடைசியா சண்டைதான் என்று முடிவானது ..
21st May 1668 ரெண்டு கப்பல்கள் சென்னையை அடைந்தன .. ஒரு மாத பேச்சு வார்த்தைலுக்கு பிறகு 22 August 1668 பாக்ஸ்கிராப்ட் விடுதலை செய்யப்பட்டார் .. நமது சென்னை கோட்டையில் நடந்த முதல் அரசியல் சூது ரத்தமின்றி சரி செய்யப்பட்டது ... 1670 ரெண்டு பேரும் இங்கிலாந்துக்கு திருப்பினர். (எந்த வித தண்டனையும் இல்லாமல் !! என்ன இப்ப இருக்கிற அரசியல் மாறி இருக்கா? திருடியவனுக்கு தண்டனை இல்லாமல்!!)

1670  புது ப்ரெசிடென்ட் .. Sir william Langhorne,சம்பளம் 300 பவுண்டு வருடத்திற்கு, இவரின் தலைமை பதவியின் பொது தான் முதல் வெள்ளைக்கார துரைசானி அம்மாக்கள் நமது சென்னை மண்ணில் கால் வைக்க அனுமதிகப்பட்டர்கள் ..டச்சு மற்றும் போர்துகீசியரகம் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை பெண்களை கப்பலில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பும் பழக்கம் 1580 இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன .. (இதை போன்று அனுமத்திக்க காரணம் ..பராடஸ்டன்ட் ஆங்கிலேயர்கள் கத்தோலிக்க போர்த்துகீசிய பெண்களை மணக்க விரும்பாமையே )
   சரி எவ்வளவு பேர் கோட்டையில் இருந்தார்கள் ? கல்யாணம் ஆகி இருந்ததா? ஒரு சிறு குறிப்பு :-

1678 ஜனவரியில் 24 பேர் இருந்தார்கள் கோட்டையில்

அதில் ஆறு பேர் மட்டும் திருமணம் ஆனவர்கள் (மனைவியுடன் இருந்தவர்கள் ஐவர் மட்டுமே )
ஐந்து கல்யாணம் ஆகாத பெண்கள் கோட்டையில் இருந்தனர், அதில் இருவர் விதவைகள், இருவர் இங்கிலாந்து இருந்து திருமணத்திற்காக அனுப்பப்பட்டவர்கள்)
இதை தவிர கோட்டைக்கு வெளியே வைட்டவுன்
(white town) பகுதியில் பதினாறு ஆங்கிலேயர்கள் வாழ்ந்து வந்தனர் ..(இவர்கள் பல் வேறு பெண்களை திருமணம் செய்துகொண்டு இருந்ததாக சொல்கிறது )

மொத்தமாக நாற்பது ஆண்களும் பத்து பெண்களும் ஆங்கிலேயர்கள் இருந்தனர் முழுமையான சென்னை பட்டணத்தில் ..
 இந்த கணக்கில் ஐரோப்பிய சிப்பாய்கள் கணக்கில் இல்லை ..

1670 முதல் பல்வேறு லோக்கல் மக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன அவைகளை அடுத்த பதிப்பில் பார்ப்போம் ..

















Thursday, 15 August 2013

story of madras part - 01

சென்னையின் கதை  பாகம் - 1  ( 1600 - 1700AD) 


     நமது சென்னை மாநகரின் கதை பற்றி பல பேர் எழுதி நீங்கள் வாசித்து இருப்பீர்கள் .. தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் .. புத்தகம் படிப்பது  என்பதே துர்லாபம் ஆகி போய் விட்டது .. காரணம் ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டியதில்லை .. பிட் பிட்டாக தெரிந்தாலே அவன் பெரிய விஷயக்காரன் என்றாகிவிட்டது ..

        சென்னை பற்றிய விசயமும் அதேதான் .. அதை மாற்ற ஒரு சிறு முயற்சி ..இது ஒரு நீண்ட பதிவாக இருக்க பார்த்தசாரதியும், கபாலீஸ்வரரும் அருள் புரிவாராக .. 


      நமது சென்னை பற்றிய பதிவை ஆரம்பிப்பதற்கு நாம் செல்ல வேண்டிய இடம் .. ஐரோப்பா...லிஸ்பன் நகருக்கு  ,  1500-1600 AD வரை போர்துகேசியர்கள் மட்டுமே ஆப்ரிக்க கண்டத்தை சுற்றி வந்து இந்தியாவில் வியாபாரம் செய்து வந்தனர் ..

ஐரோப்பியாவில் மிகப்பெரிய வர்த்தக நகராக அப்போது 1500 AD இல் திகழ்ந்த நகரம் ஆம்ஸ்டர்டம் ... அங்கு இருந்து டச்சு கார்கள் எல்லா வாணிப பொருள்களையும் லிஸ்பன் நகரில் மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர்


அப்போது போர்சுகளை ஆண்டு வந்த அரசன் டான் சபாசிதியன் என்பவன் பிள்ளை இல்லாமல் இறந்ததால் ஸ்பெயின் தேசத்து அரசன் பிலிப் 2 என்போன் பட்டத்துக்கு வந்தான் .. இவன் டச்சு காரர்களை போர்ச்சுகல் உள்ளே விட மறுத்து வெறுப்பை சந்தித்தான் ..


இதில் ஆரம்பித்த வேகம் டச்சு காரர்களை நேரடியான வியாபாரத்தில் ஈடுபட வைத்தது ..ஸ்பெயின் அரசின் ஆட்சி முறையினால் ஐரோப்பியாவில் ஸ்பெயின் தனது வலுவை இழந்து போர்ச்சுகல் நாட்டையும், இந்திய வணிகத்தையும்  இழந்தது .. 



1610 AD, டச்சு காரர்கள் .. முதன் முதலாய் சென்னையை அடுத்த புலிகாட் (பழவேற்காடு ) பகுதியில் ஒரு சிறு வியாபாரத்தலத்தை அமைத்து நமது சென்னை உருவாக காரணம் ஆயினர் ..
1660 இல் நாகப்பட்டினம் மற்றும் கொச்சின் பகுதிகளை போர்ச்சுகீசியரிடம் இருந்து பெற்று தென் இந்தியாவின் முதன்மை வர்த்தக நாடாக மாறி இருந்தனர் ..

சரி ..ஆங்கிலேயர்? என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள்? 


1599 ஆம் ஆண்டு "merchant adventurers" என்கிற குழுவின் கீழ் இந்தியாவில் வியாபாரம் செய்ய வேண்டி இங்கிலாந்து அரசரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்து ..23 September 1600..அன்று "East india association" 20 டைரக்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது ..

சென்னைக்கு அவர்கள் உடனடியாக வரவில்லை ..அப்போது டச்சு அரசுடன் இங்கிலாந்து அரசுக்கு இருந்த உடன்படிக்கை காரணாமாக அவர்கள் துணிந்து இந்தியாவிற்கு வரவில்லை ..

1601 AD, ஆங்கிலேயர் கப்பல் சென்ற இடம் இந்திய அல்ல .. இந்தோனேஷியா நாட்டில் உள்ள indian archipelago என்கிற தீவிற்கு .. அவர்கள் வியாபரம் பண்ண விரும்பிய பொருள் ஜாதிக்காய், மிளகு ,கற்பூரம்  (nutmeg, pepper and camphor)

பண்ட மாற்றுமுறை இருந்த அந்த காலத்தில் இந்தோனேஷியாவில் இந்திய துணிகளுக்கு இருந்த கிராக்கியை பயன் படுத்தத் நினைத்த அவர்கள் டச்சுடன் சமரசம் செய்து கொண்டு சென்னையில் புலிகாட்டிலே அவர்களுடன் ஒரு ஒண்டு குடித்தனம் நடத்தினர்!!
காலத்தில் ஒரு பெரும் சண்டை இந்தோனேஷியாவில் நடந்து பல ஆங்கிலேயர்கள் கொடூரமான முறையில் டச்சு காரர்களால் கொல்லப்பட்டார்கள் (massacre of amboyna)    இதனால் ஆங்கிலேயர்கள் புலிகாட்டில் இருந்து வெளியேறி 1st March 1639 AD,  இல் பிரான்சிஸ் டேயால், அப்போதைய விஜயநகர(சந்திரகிரி) ராஜா  ..உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தற்போதைய கோட்டை இருக்கும்  பகுதியை வாங்கினார் ..


அந்த அரசனும் அந்த இடத்தை "ஸ்ரீரங்கராஜ பட்டினம் " என்று பெயர் சூட்ட சொல்லியே உத்தரவிட்டார் (மெட்ராஸ் பேரு ஸ்ரீரங்கபட்டினம்  என்று இருந்திருக்க வேண்டும்??)

ஆனால் செங்கல்பட்டு பகுதியில்  இருந்த நாயக்க பாளையக்காரர் தனது தந்தையார் பெயரே இருக்கவேணும் என்றும் இல்லையேல் பிரச்சனை!! என்று சொன்னதால் .. சென்னை பட்டணம் என்று பெயர் இடப்பட்டதாக தெரிகிறது ..

அந்த நூற்றாண்டில் உடனே அந்த கோட்டை எழுந்துவிடவில்லை ..

மேலும் பார்ப்போம் ....