ஜாதி அரசியலும் புனித ஜார்ஜ் கோட்டையும் 1707
(English version at the bottom)
இன்று நாம் மோடி அரசிற்கு எதிராக பல ஜாதி கூட்டங்களும் மாநாடுகளும் நடப்பதை காண்கிறோம்.. இப்படி செய்வது எல்லா காலங்களிலும் இருந்திருக்கின்றன .. ஆளும் ஆரசை அசைத்துப்பார்க்க எதிர்கட்சிகளின் கடைசி ஆயுதம் அதுவே !!
சென்னை பட்டணத்தை அன்றைய தினம் ஆண்டு வந்த கவர்னர் தாமஸ் பிட் (5 ஜூலை 1953 - 28 ஏப்ரல் 1726) ஆளுமையில் வலது மற்றும் இடது ஜாதிக்கார்கள் இடையே நடைபெற்ற சண்டையை பற்றிய ஒரு பதிவு காலம் 1707
இந்த கவர்னர் காலத்தில்தான் கோழி சண்டை மற்றும் பல சண்டை விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன .. காரணம் அதனால் ஏற்பட்ட சூது மற்றும் கைகலப்பு .. வறுமை ..
இவர் மற்றொரு விசயத்திற்கும் சரித்திரத்தில் இடம் பெறுகிறார் இன்றைய பிரான்ஸ் அரசின் மணி மகுடத்தை அலங்கரிக்கும் வைரத்தை இவர் ஒரு இந்திய வியாபாரியிடம் இருந்து பெற்று அதை இங்கிலாந்த் எடுத்து சென்று விற்று நிறைய பொருள் ஈட்டினார் !!
அதன் லிங்க் பக்கத்தை காண
=======================================>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<==================================
அன்றைய ஜாதி பிரிவுகள் அந்த நூற்றாண்ற்கே உரித்தானவை .. அதை பற்றி இந்த பற்றி குறிப்புகள் எழுதிவர் சொல்லி இருப்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் !! (படத்தை பார்த்து படித்துக்கொள்ளுங்கள் !!) என்னடா அடக்கப்பட இனம் .. பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்ட ஜாதி என்றெல்லாம் சொல்லுகிற ஜாதி அன்று நிறைய வியாபாரம் செய்து வெள்ளைக் காரர்களையே மிரட்டிக்கொண்டு இருந்த செய்தியை காண்கிறோம் !!
வலது கை ஜாதிக்காரர்கள் கோட்டையை விட்டு வெளியேறி (ஒரு வியாபார இடம்தான் கோட்டை , இன்றைய பெரிய கம்பனியின் பாக்டரி கோட்டர்ஸ் போல) அருகில் டச்சுகாரர்கள் வசம் இருந்த புனித சாந்தோம் பகுதிக்கு போய் விட்டார்கள் !!
இப்படி வலது ஜாதிக்கார்கள் கோட்டையை விட்டு வெளியேற காரணம் ஃபிரேசர் என்கிற கம்பனியின் டைரக்டர் அவர்களை தூண்டிவிட்டதுதான் என்று கண்டு கொண்டனர் !!
கிழக்கிந்திய கம்பெனியும் இப்படி ஓடி போனவர்கள் சொத்துகள் பிடுங்கப்படும் ..அவர்கள் கம்பெனிக்கு சொந்தமான இடத்திற்குள் நுழைந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியும் ஒரு பயலும் வரவில்லை !!!
சாந்தோம் பகுதியில் இருந்து கம்பெனிக்கு கிடைத்த தகவல் படி இவர்களை தூண்டி விடுவது ஃப்ரசெர் தான் என்பது ஊர்ஜிதமானது .. இதை இவர்களுக்கு சொன்ன நபர் முன்பு கம்பனியில் வேலை பார்த்து தற்போது டச்சு காரர்களிடம் வேலை பார்க்கும் ஒரு நபர் !!!
வலது கை ஜாதிக்கார்கள் தங்களுக்கு உதவி செய்யும கம்பெனி டைரக்டர் ஃப்ரசெரை " சின்ன கேப்டன் " என்று அழைத்ததும் .. கும்பலாக சின்ன கேப்டன் என்று கோஷம் இட்டுக்கொண்டு இருந்த செய்தியும் ...இந்த தூண்டி விடப்பட்ட ஜாதி சண்டையால் ஆங்கிலேயரின் வியாபாரம் இந்தியாவில் முடிவுக்கு வரும் நிலை வந்து விட்டதையும் அறிந்து அதிர்ந்து போய் இருந்தனர்
ஃப்ரசெர் தன்னை சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்து ஆங்கிலேயரின் இன்னொரு தமிழகத்து கோட்டையான புனித டேவிட் (கடலூர் அருகில் உள்ளது ) ஜாதி கலவரம் ஏற்ப்பட்டு பலர் இறந்து விட்டனர் என்று வலது கை ஜாதி காரர்கள் சமாதானத்திற்கு வாராமல் இருக்க புரளியை கிளப்பி விட ...
கவர்னர் பிட் ஃப்ரசெரை வீட்டுக்காவலில் வைத்து 23 செப்டம்பர் 1707 அன்று ஒரு பொது மன்னிப்பு அறிக்கை விட்டு அனைவரையும் திரும்பவும் கோட்டைக்கு அழைத்தார் !!! ஆனால் ஒருவரும் வரவில்லை .. 24 செப்டம்பர் ... ஆத்திரத்தில் சந்தோமை நோக்கி ஒரு படை எடுத்து சென்று அனைவரயும் (வலது கை ஜாதிக்காரர்களை ) கொன்று விடுவோம் என்று ஆட்களை தயார் படுத்தினார் !!
ஆனால் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த ஒரு இந்திய அதிகாரி தனக்கு டச்சு கவர்னரை தெரியும் என்றும் அவரிடம் பேசி இவர்களை அங்கிருந்து விரட்டி விட சொல்கிறேன் என்று பேசி .. அந்த சண்டையை நிறுத்தினார்...
அதே போல் அனைவரும் திரும்பி அனுப்பிவைக்கப்பட்டு ... வந்தனர் .. அவர்களிடம் முதல் முதலில் 1652 ஆண்டு போடப்பட்ட வலது கை இடது கை ஜாதி கார்கள் உள்ள இருப்பிடம் பற்றிய கையப்பம் இடப்பட்ட பெரிய உடன்படடிக்கை காட்டப்பட்டது ..(அதில் பல வீதிகள் இடங்கள் பெயர்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன ..1652 அவை இன்று இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை) அந்த உடன்படிக்கை படி எவரும் அடுத்தவர் இடத்தில் திருமணம் சாவு சடங்கு நடத்த கூடாது என்றும் .. அதை மீறுபவர்கள் 1000 பவுண்ட் பணம் தண்டம் கட்ட வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தாது ..
பல பகுதிகளை படிக்கும் பொது இது வலது கை ஜாதி கார வியாபாரிகளை ஃப்ரசெரும் இடது கை ஜாதி கார வியாபாரிகளை கவர்னர் பிட்டும் ஆதரித்தது தெரிக்கிறது..
எல்லாம் வழக்கபோல .. சுபம் .. ரெண்டு அதிகாரியும் நிறைய இந்திய பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு இங்கிலாந்த் சென்றார்கள் !!! தண்டனை எதுவும் இல்லாமல் ..
ஒரு அழகான ரிப்போர்ட் ஒன்றும வெளியிடப்பட்டது .. அதன் சாராம்சம் .. கீழே கடைசியில் ஆங்கிலத்தில் உள்ளது .. படித்துக்கொள்ளவும் !! அதை தமிழாக்கம் செய்தால் ..அவ்வளவு யோகியன் வேஷம் போடுவது போல என்னால் எழுத முடியாது !!!
அரசியல் வாதிகள் கோட்டையில் இட்ட அதிகார சண்டையை சாதி சண்டையாக மாற்றிய பெருமையை இந்த இருவரும் இந்திய சரித்திரத்தில் அரங்கேற்றினார்கள் !!!
விஜயராகவன் கிருஷ்ணன்
Caste politics at the corridors of power in St. George fort in 1707 AD
today we see massive rallies in Gujarat and many parts of India in the name of caste politics when no other means to outsmart the government… it’s the last armor in the hands of opposition ..
During the governorship of Mr. Thoms pitt (5 July 1653 – 28 April 1726), there was a great quarrel between the “Right and Left hand castes .. inside the English quarters of East india company around the fort St. George in madras in the Year 1707 AD according to the east India chronicles.
by the way he banned cock-fighting and other traditional games regarding it as the foremost reason for the poverty of the inhabitants of Madras.!!! he also got through force deceit a diamond which was largest in the world then from india ...
you can see that here ==============>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<================
These caste differences are extremely unique to that century!!! Go though the attached picture for details which the author of this chronicles has found out and explained in detail in 1842 AD…
The right hand caste people left the fort quarters of the English east india company and went to the st.Thome area which was under the Dutch control then.. Resulting in a huge loss to the English trade..
The English found to their dismay that one of the second in command in the fort Mr.Fraser who was one of the directors at the forte has conspired with the right hand caste to make an insurrection and rebellion of the government at the fort .
The english sent a stern warning to the deserters they has to return to the fort and start working or else their property will be confiscated and if they are found inside the English jurisdiction will be punished .. still no result!!
then english got a letter from a local source in St. thome stating the source of the troubles was not from them in st. thome where all the big wigs of the right hand caste camped and fighting against the english!! But from the inhabitants of the fort !!
the source a local nawab (a former employee of English a local chieftain now works for Dutch) while he was talking to the right hand caste people found they got helping hand from the second of council (Mr.Fraser) on their side..
!!
he was called by them “chinna captain” which in tamil implies second in command ..the whole of the council was shocked to find the scheme of a person from their own side which would have ended their venture in india prematurely !!! Governor Thomas pitt heard the shocking news that they had often heard the mob cry out the chinna captain !!
Mr.Fraser spread a rumor that the castes were rose one against the other at fort St. David where several had been killed … this is to encourage more revolt among the right hand caste
so Governor Mr.Thomas pitt found right hand caste had got Mr.Fraser among them for their tool or they wound not have adventured to have done what they have ..
Mr.Fraser was immediately put on house arrest and no communication to be made with him by any one… and On Tuesday, 23 September 1707 the governor and council granted a pardon to the hand hand cast who were at st thome …
but nothing happened no one turned up to the fort.. so on 24the Wednesday governor pitt decided to march on to St. thome (where they are harboured) and strom that place with 250 soldiers and 200 talliars and 200 peon and many more persons and put as many of the right hand caste people to sword !!!
the local chieftain fo the english resisted this foolish idea and said he knows the dutch governor and will make arrangement to evict the right hand caste people from st. thome ..
the governor of St. thome kept the promise he sent out all the rebels back and all returned to the fort ..
Governor pitt pulled a old document of 1652( there was no chronicles of English company before 1670 existed anywhere so it was a rare document ) which was signed by the right hand and left hand people signed by one connaree chitty and sheshadree Naik inhabitants of chinnapatam !! while the fort was formed at the first place that .. each caste will have separate street and no one should break the rules of others .. and first breaker shall forfeit a thousand pounds
there are lot of details elaborated about the street designated to each caste .. I doubt it would have been changed from1652!!!
going through the records it’s the rivalary between merchants of right hand caste and left hand caste which are supported by Mr.Fraser and governor pitt respectively ..
at the end of the day.. no one was punished .. both officials went to england with their personal fortune raised with lot of loot from india ..
so .. for their own power politics these two characters earn their name in the annuls of Indian history as first among many (yah today so many) for instigating communal fight for furthering their own power struggle in the corridors of power!!!
finally the board of directors gave a detailed review of the situation and send Mr.Fraser back to England ..
the report of the board is worth reading ..Saturday 6th December 1707…
“we say in general, that the generality of men in all countries are naturally disposed to be at ease and live peaceably, if they have a quiet possession of liberty and property; and the most turbulent spirits will in a good measure lie still unless they have a specious handle given them on account of hardships done or offered to be done them. Nor does it appear probable to us that either of the two castes would have ventured to fly in the face of government, which is or should be power without a real or apprehended great provocation: “ …
“first people secretly murmur and complain, then they break out into ore open reproaches and at last into downright mutinies and rebellions “
“justice be administered equally and impartially, and no real cause given of discontent and then if you find any makebates that would be putting the people in a ferment, make them public examples as their faults deserve and remember in such cases “ too much pity spoils a city”
“That the Throne can only be established in righteousness”
Vijayaraghavan krishnan